எதிர்க்கட்சிகள் கூட்டணி உடன்படிக்கையில் கையெழுத்திடுவது பற்றி முடிவு எடுக்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் செயற்குழு விரைவில் கூடி தீர்மானம் எடுக்கும்’ என்று அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
‘தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்குழு விரைவில் கூடி பத்து எதிர்க்கட்சிகள் சேர்ந்து அமைக்கும் கூட்டணியின் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையொப்பம் இடுவது பற்றி ஆராய்ந்து ஒரு முடிவு எடுக்கும். அதன் பின்னரே எதிர்க்கட்சிகளின் புரிந்துணர்வு உடன்படிக்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கையெழுத்திடும்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
‘எதிர்க் கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஒன்றை அமைப்பது ஒரு நல்ல ஆரோக்கியமான விடயம். எதற்கும் கூட்டமைப்பின் செயற்குழு இவ்விடயத்தை ஆராய்ந்து தான் முடிவு எடுக்க வேண்டும்’ என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.