எதிர்காலத்தை பற்றி எந்த எதிர்பார்ப்பும் இல்லை – விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘சேதுபதி’. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்திருக்கிறார். அருண் குமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் விஜய்சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.

vijay-sethu-pathy

மதுரை பின்னணியில் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். போலீஸ் அதிகாரிக்கு வெளியேயும், வீட்டிற்குள்ளேயும் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து ஆக்‌ஷன் படமாக உருவாக்கியிருக்கிறார்கள்.

இப்படம் குறித்து விஜய் சேதுபதி கூறும்போது, “இப்படத்தில் நான் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கிறேன். ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தை இயக்கிய அருண்குமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் உருவாகும் போதே இயக்குனர் என்னிடம் இந்த கதையை கூறியிருந்தார். யதார்த்தமான கதை. போலீஸ்காரனின் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனையை உருவாக்கியிருக்கிறோம். எனக்கு மனைவியாக ரம்யா நம்பீசன் நடித்திருக்கிறார்.

இப்படத்தின் தலைப்பு என் பெயரிலேயே இருப்பதால் முதலில் தலைப்பு வைக்க தயங்கினேன். பின்னர் கதைக்கு பொருத்தமாக இருப்பதால் சம்மதித்தேன்” என்றார்.

இனிமேல் ஆக்‌ஷன் படத்தில் தான் நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு, எதிர்காலத்தைப் பற்றி எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை, நல்ல கதைகள் அமைந்தால் எந்த கதாபாத்திரத்திலும் நடிப்பேன் என்றார்.

Related Posts