எதிர்காலத்தில் கிளிநொச்சி முக்கியம் ஒரு மாவட்டமாக திகழும்: சம்பந்தன்

கிளிநொச்சி மாவட்டம் எதிர்காலத்தில் ஓர் முக்கியம் இடம்பெற்ற மாவட்டமாக திகழும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி வட்டக்கச்சி மத்திய கல்லூரி வைர விழாவும், வருடாந்த பரிசளிப்பு விழாவும் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் பாரிய தொழில் பயிற்சி நிலையம் உள்ளது என்றும் இன்னும் பல தொழிற்சாலைகள் இங்கு அமையவுள்ளது என்றும் குறித்த தொழிற்சாலைகளில் முக்கிய பணிகளுக்கு இந்த மாவட்டத்தினை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புக்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அதற்காக சிறந்த மாணவர்களை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

கிளிநொச்சி வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் கலந்து கொண்டிருந்தார்.

அத்துடன், நிகழ்வில் வைர விழாவை நினைவுப்படுத்தும் தூபி எதிர்கட்சி தலைவரால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts