எதிர்காலத்தில் ஆசிரியர் நியமனங்கள் வழங்கி வைக்கப்படுகின்ற போது எந்த காரணம் கொண்டும் ஆசிரியர் உதவியாளர்கள் என்ற ஒரு பதவிக்காக நியமனம் வழங்கப்படமாட்டாது என கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டங்களை அண்மித்த தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான உதவி ஆசிரியர்கள் 113 பேருக்கான நியமனங்கள் கல்வி அமைச்சில் (12.07.2017) வழங்கி வைக்கப்பட்டது.
கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் ஆகியோர் இணைந்து இதனை வழங்கி வைத்தனர்.
ஆசிரியர் நியமனங்கள் வழங்கி வைக்கப்படுகின்ற போது எந்த காரணம் கொண்டும் ஆசிரியர் உதவியாளர்கள் என்ற ஒரு பதவிக்காக நியமனம் வழங்கப்படமாட்டாது. இந்த நியமனத்தில் பல குளறுபடிகள் நிலவுகின்றன.
அதற்கு முக்கிய காரணமாக விளங்குவது இதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமாணி அறிவித்தலே. எனவே எதிர்காலத்தில் அந்த தவறு ஏற்படாது என்று அவர் கூறினார்.