எடுத்துக் கொள்ளப்படாத பிரேரணை! கறுப்புப் பட்டியுடன் ஆஜரான சிவாஜிலிங்கம்

சிவாஜிலிங்கத்தின் ஒரு பிரேரணை வடக்கு மாகாணசபையில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.இதனால் இன்றைய சபை அமர்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கறுப்பு பட்டி அணிந்து சபைக்கு வருகை தந்துள்ளார்.

sivajilingam_tna_mp

இவரது பிரேரணையில் இனப்படுகொலை என்ற பதம் பயன்படுத்தப்பட்டிருப்பதால் அவரது பிரேரணை சபையில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இதனாலேயே அவர் தனது எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாக இன்றைய சபை அமர்வில் அவர் கறுப்புப் பட்டியுடன் வந்துள்ளார்.

16 ஆவது சபை அமர்வு சற்று முன்னர் ஆரம்பம்

வடக்கு மாகாண சபையின் 16ஆவது மாதாந்தக் கூட்டம் சற்றுமுன்னர் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

வடக்கு மாகாண சபையின் 16ஆவது அமர்வு கைதடியில் உள்ள வடக்கு மாகாண கட்டடத் தொகுதியில் அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

Related Posts