கடந்த வருடத்தில் எயிட்ஸ் நோயாளர் தொகை அதிகரித்துள்ளதாகவும் வருட இறுதிவரை எச்.ஐ.வி நோய்த் தொற்றுக்குள்ளாகி 44 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய பாலியல் நோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் இறுதி வரையில் எச் .ஐ. வி நோய்த் தொற்றுக்குள்ளாகி 44 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நோய்த்தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் தொகை கடந்த 2015 ஆம் ஆண்டை விடவும் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, நோய் தொற்றுக்குள்ளான 259 பேர் கடந்த வருடம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், குறித்த நோய்தொற்றுக்கு இலக்காகி 189 ஆண்களும், 60 பெண்களும் நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ளதுடன் இவர்களில் 15 கர்ப்பிணித் தாய்மார்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.