2050ம் ஆண்டு ஆகும்போது இலங்கையின் மொத்த சனத்தொகையில் 64 சதவீதமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருப்பர் என உலக சுகாதார அமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதனால் நீரிழிவு நோயில் இருந்து பாதுகாப்பு பெற அதிகூடிய கவனம் செலுத்த வேண்டும் என அந்த அமையம் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது இலங்கை சனத்தொகையில் கிராம புரத்தில் 10 வீதமான மக்களும் நகர் புரத்தில் 15 வீதமான மக்களும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், 10-15 வீதமான பாடசாலை மாணவர்களும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தவறான உணவு, உடற்பயிற்சி இன்மை மற்றும் மன அழுத்தம் என்பன நீரிழிவு நோய் ஏற்பட காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.