நாட்டை ஊடறுத்தும் நாட்டுக்கு அண்மையில் உள்ள கடற்பகுதிகளிலும் மணித்தியாலத்துக்கு 60-70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
24 மணிநேரத்துக்குள் இதனை எதிர்ப்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ள வானிலை அவதான நிலையம், புத்தளம் முதல் மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையிலும், ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையிலுமான கரையோரப்பகுதிகளில் வாழ்வோர் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும் அந்நிலையம் அறிவுறுத்தியுள்ளது.