எங்கள் மகிழ்ச்சியை கெடுத்து விடாதீர்கள் -மலிங்கா, மேத்யூஸ்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் அசத்தி வரும் இலங்கை வெற்றிகளை குவித்து வருகிறது.
டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இலங்கை அணி, ஒருநாள் தொடரையும் முழுமையாக 3-0 என்று கைப்பற்றியது.

malinga_mathews_001

இந்நிலையில் முதல் டி20 போட்டியிலும் அசத்திய இலங்கை அணி, 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் நாங்கள் சிறப்பாக செயல்பட இடைகால பயிற்சியாளராக இருக்கும் ஜெரோம் ஜெயரத்ன தான் காரணம் என்றும், நான் ஓய்வு பெறும் வரை அவரையே இலங்கை அணிக்கு பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் எனவும் டி20 அணித்தலைவர் மலிங்கா கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், \”நான் இலங்கை தேசிய அணியில் 12 ஆண்டுகளாக விளையாடுகிறேன். ஆனால் இவர் தான் எங்களை புதிய வழியில் அழைத்து செல்கிறார். வீரர்களின் மனவலிமையை அதிகரிக்க உதவுகிறார்.

ஒவ்வொரு வீரர்களின் மீதும் அவர் தனி அக்கறை கொண்டுள்ளார். இளம் வீரர்கள் அவருடன் நெருங்கி பழகுகின்றனர்.

அதனால் மிகவும் மகிழ்ச்சியாக செயல்படுகின்றனர். அவர்களின் மகிழ்ச்சியை கெடுத்து விடாதீர்கள்” என்று கூறியுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு இதையே இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டி தலைவர் மேத்யூசும் கூறியிருந்தார்.

தற்போது இடைகால பயிற்சியாளராக இருக்கும் ஜெரோம் ஜெயரத்ன அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் டி20 உலகக்கிண்ண போட்டி வரை பயிற்சியாளராக தொடர்வார் என்று தெரிகிறது.

Related Posts