எங்கள் சகோதரிகளின் கற்புக்களை சூறையாட காரணமான பேரினவாத கட்சிகளுடன் இணைந்து போட்டியிட வெட்கமில்லையா? : மயூரன்

எங்கள் சகோதரிகளின் கற்புக்களை சூறையாட காரணமான பேரினவாத கட்சிகளுடன் இணைந்து போட்டியிட வெட்கமில்லையா என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் செ. மயூரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

நெடுங்கேணியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

இசைப்பிரியா என்ற சகோதரியின் கற்பு சூறையாடப்பட்டதுதான் தெரியும் ஆனால் அதற்கு பின்னால் எத்தனையோ சகோதரிகளினுடைய கற்பு சூறையாடப்பட்டுள்ளது, அதுமாத்திரமன்றி எத்தனையோ உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு எமக்கு பல அநியாயங்களை செய்த பேரினவாத கட்சியின் பக்கம் சென்று எம்மவர்கள் போட்டியிடுகின்றனர்.

இவ்வாறு நினைக்கையில் எங்களது இரத்தம் கொதிக்கிறது. எம்மை அழித்த இனத்தோடு கைகோர்த்து நிற்பதில் வெட்கமில்லையா என்று கேட்கத்தோன்றுகின்றது. எனவே அவர்களிற்கு தகுந்த பதிலடியை வாக்கு என்ற ஆயுதத்தால் கொடுக்க வேண்டும்.

தென்னிலங்கை பேரினவாத கட்சிகள் வடக்கு கிழக்கில் இனி போட்டியிடாத வகையில் தமிழ் மக்கள் அவர்களிற்கு நல்ல பாடத்தை புகட்ட வேண்டும். தமிழர்கள் சலுகைகளிற்கு விலை போகாதவர்கள் என்பதை நிரூபித்து காட்டுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts