தமிழ் சினிமாவில் நகைச்சுவை மட்டுமின்றி அதில் கருத்துக்களையும் கூறி அனைவரையும் கவர்ந்தவர் விவேக். இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடித்து, திரையில் வெற்றி நடைப்போடும் படம் என்னை அறிந்தால்.
இப்படத்தில் காமெடி குறைவு என்றாலும் இவர் வரும் காட்சிகள் அனைவராலும் ரசிக்கப்படுகிறது. இது குறித்து இவர் கூறுகையில் ‘இன்று சினிமாவை தியேட்டரில் வந்து பார்ப்பவர்கள் என்றால் அதில் பெரும்பாலும் விஜய், அஜித் ரசிகர்கள் தான்.
இவர்கள் இல்லையென்றால் தமிழ் சினிமா அடுத்த கட்டத்திற்கு நகரவே நகராது, மேலும், இரண்டு தரப்பு ரசிகர்களும் மோதிக்கொள்ள வேண்டாம், நீங்கள் ஒற்றுமையாக இருந்தால் தமிழ் சினிமா இன்னும் அடுத்த கட்டத்திற்கு செல்லும்’ என்று தன் பாணியிலேயே கருத்து கூறியுள்ளார்.