எங்களுக்கு தெரியாது என்கிறது இராணுவம்

army-ruwan-vanikasooreyaஇசைப்பிரியா மற்றும் அவருடன் உள்ள பெண் தொடர்பாக ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள் மற்றும் செய்திகளுடன் இராணுவத்தின் விசாரணை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்படும் என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.

இராணுவ முகாமில் இசைப்பிரியா என்று ஊடகங்களில் வெளியான புகைப்படங்களில் இருக்கும் இரு பெண்கள் தொடர்பில் இராணுவத்துக்கு தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவர்கள் யார், எவர் என்பது தொடர்பில் நாங்கள் அறியோம். அவர்களின் பெயர்கள் இசைப்பிரியா, உஷாலினி என்பதைக் கூட ஊடகங்கள் வாயிலாகவே நாம் அறிந்துகொண்டோம்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கமைய போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இராணுவத்தின் விசாரணை நீதிமன்றத்தின் கீழ் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இலங்கை இராணுவத்துக்கு எதிராக சனல் – 4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட வீடியோ காட்சிகள், உண்மையானவையா அல்லது பொய்யானவையா என்பது தொடர்பிலும் இந்த இராணுவ விசாரணை நீதிமன்றம் விசாரணை செய்து வருகின்றது என்று அவர் கூறினார்.

மேற்படி இசைப்பிரியா மற்றும் அவருடன் உள்ள பெண் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் செய்திகளுடன் இந்த இராணுவ விசாரணை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்படும்.

இது தவிர, குறித்த புகைப்படத்தில் இருப்பவர்கள் யார் என்பது தொடர்பில் இராணுவத்துக்கு தெரியாது என்று இராணுவ பேச்சாளர் மேலும் கூறினார்.

Related Posts