ஜீ.சி.ஈ. சாதாரண தரப் பரீட்சைக்கான நுழைவுச் சீட்டுக்களை அதிபர்கள் வைத்திருக்க முடியாது என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
சாதாரண தரப் பரீட்சைக்காக பாடசாலைகளின் ஊடாக தோற்றும் மாணவர்களுக்கான பரீட்சை நுழைவுச் சீட்டுக்கள் தபால் மூலம் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நுழைவுச்சீட்டுக்கள் அதிபர்களுக்குக் கிடைத்ததும் உடனடியாக அவற்றை மாணர்களிடம் வழங்க வேண்டும். எந்தக் காரணத்திற்காகவும் நுழைவுச் சீட்டுக்களை அதிபர்கள் வைத்திருக்க முடியாது.
நுழைவுச்சீட்டுக்களை அதிபர்கள் வைத்துக் கொள்வதால் மாணவர்கள் ஏதேனும் பிரச்சினைகளை எதிர்நோக்கினால் அதற்கான முழுப் பொறுப்பையும் அதிபர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனப் பரீட்சைகள் ஆணையாளர் டப்ள்யூ.எம்.என்.ஜே. புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை ஜீ.சி.ஈ. சாதாரண தரப் பரீட்சை நடத்தப்படவுள்ளது. இம்முறை மொத்தமாக 6 இலட்சத்து 64 ஆயிரத்து 537 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். இதில் 4இலட்சத்து 3 ஆயிரத்து 442 பேர் பாடசாலை மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.