எகிப்திய விமானம் கடத்தப்பட்டு சைப்பிரசில் தரையிறக்கம்!கடத்தல்காரன் கைது

எகிப்த்தின் உள்நாட்டு பயணிகள் விமானம் MS181 கடத்தப்பட்டுள்ளது. அலக்சாண்டிரா வில் இருந்து தலைநகர் கெய்ரோ நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானமே கடத்தப்பட்டிருக்கிறது. கடத்தப்பட்ட விமானம் தற்போது சைப்பிரஸ் நாட்டில் தரையிறங்கியுள்ளதாக தெரியவருகின்றது.

இந்த Airbus 320 ரக விமானத்தில் 81 பயணிகள் இருந்ததாக எகிப்தியன் ஏயார் நிறுவனம் கூறுகின்றது. விமானியிடமிருந்து கட்டுப்பாட்டறைக்கு கிடைத்த தகவலின் படி வெடிக்கும் பட்டியணிந்த பயணி ஒருவரின் அச்சுறுத்தலுக்கமைய விமானம் சைப்பிரசில் தரையிறக்கப்ட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பிந்திய தகவல்

விமானத்தில் பயணித்த 70 பேர் சற்றுமுன் விடுதலைசெய்யப்பட்டனர் 7 பணியாளர்கள் 4 வெளிநாட்டவர்கள் உட்பட 11 பேர் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

தனக்கு சைப்ரஸ் தீவில் குடியேற அனுமதி அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், விமானத்தை தகர்த்து விடுவேன் என கடத்தல்காரன் சைப்ரஸ் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளான்.

சைப்ரஸ் நாட்டு பெண்ணான தனது முன்னாள் மனைவியை சந்தித்துப்பேச வேண்டும் எனவும் அந்த கடத்தல்காரன் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், இதையடுத்து, அவன் போலீசாருக்கு அளித்த ஒரு கடிதத்தில் உள்ள முகவரியின் அடிப்படையில் அந்தப் பெண்ணை கண்டுபிடித்த போலீசார், அந்தப் பெண்ணை விமான நிலையத்துக்கு அழைத்து சென்றதாகவும் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சற்று முன்னர் கிடைத்த தகவல்களின் படி கடத்தல் காரன் பொலிசாரிடம் சரணடைந்தான்.பயணிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்

air

Related Posts