ஊழியர் சேமலாப நிதி மிகுதியை உடன் பார்க்கலாம்

ஊழியர் சேமலாப நிதி (ஊ.சே.நி) பெறும் அங்கத்தவர்கள், அவர்களது கணக்கு மிகுதியை தொழில் செயலகத்தில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள தன்னியக்க இயந்திரத்தில் சரிபார்த்துக்கொள்ள முடியும் என்று தொழில்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், சேமலாப நிதி பெறும் சுமார் 2.5 மில்லியன் தொழிலாளர்கள் அவர்களது கணக்கு மீதியை எந்தவொரு நேரத்திலும் சரிபார்த்துக்கொள்ள முடியும். தொழில் தருநர், அவருக்கு கீழ் பணியாற்றும் தொழிலாளர்களின் சேமலாப நிதியத்துக்கு பங்களிப்பு செய்துள்ளரா அல்லது இல்லையா என்பதையும் அறியமுடியும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், தொழில் செயலகத்தின் கீழ் இயங்கும் 30 பிராந்திய அலுவலகங்களிலும் இந்த தன்னியக்க இயந்திர முறைமை நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் ஊழியர் சேமலாப நிதியம் பெறும் தொழிலாளர்களின் நடவடிக்கைகளை இந்த தன்னியக்க எளிதாக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

குறித்த தன்னியக்க இயந்திரத்தில் தொழிலாளர்கள் அவர்களது கைவிரல் அடையாளத்தை பதிவு செய்வதன் மூலம் அவர்களது கணக்கு மீதியை பார்த்துக்கொள்ளமுடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts