ஊழியர் சேமலாப நிதி செலுத்ததவறிய 8 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதித் தொழில் ஆணையாளர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.டிசெம்பர் மாத கலப்பகுதியில் யாழ். மற்றும் கிளிநொச்சி, வவுனியா பகுதியில் வடமாகாண பிரதித் தொழில் ஆணையாளர் மேற்கொண்ட பரிசீலணையின் போது ஊழியர் சேமலாப நிதியினை செலுத்த தவறிய நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டன.
அந்த வகையில், யாழ். நீதிமன்றில் 03, கிளிநொச்சி 02, வவுனியா 03 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு ஊழியர் சேமலாப நிதியினை செலுத்த தவறும் நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும், செலுத்த தவறிய காலப்பகுதியில் இருந்து ஊழியர் சேமலாப நிதி செலுத்த வேண்டுமென்றும் அத்துடன் நீதிமன்ற அபராதம் செலுத்த வேண்டுமென்றும் அவர் கூறினார்.
அதேவேளை, சம்பளம் வழங்கப்படாமை மற்றும் காரணமின்றி வேலை நிறுத்தம் போன்ற காரணங்களுக்காக தொழில் தருநர்களுக்கு எதிராக யாழில் 04, கிளிநொச்சி 02, வவுனியா 03 என தொழிலாளிகளினால் 09 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.