ஊழியர் சேமலாபநிதியில் 87 நிறுவனங்கள் பதிவு

ஊழியர் சேமலாப நிதியத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் 87 நிறுவனங்கள் கடந்த வருடம்; (2014) பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட தொழில் திணைக்கள பிரதித் தொழில் ஆணையாளர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது திணைக்கள அதிகாரிகள் கடந்த 2014ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலுள்ள ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் சென்று, சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு ஊழியர் சேமலாபநிதி கட்டத்தவறிய நிறுவனங்களுக்கு எதிராக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் 42 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

சேமலாப நிதி தவிர்ந்து, ஏனைய விடயங்கள் தொடர்பில் கடந்த ஆண்டு 62 முறைப்பாடுகள் எமது திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்று, அது தொடர்பான நடவடிக்கைகள் எமது திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டு, 85 இலட்சத்து 63 ஆயிரத்து 217 ரூபாய் ஊழியர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related Posts