வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு வடக்கு மாகாண முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் முன்னிலையில் 21பேர் சாட்சியமளித்துள்ளனர்.
ஊழல், மோசடி தொடர்பாக வடக்கு மாகாண சபை அமைச்சர்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் விசாரணை நடாத்துவதற்கு ஓய்வுபெற்ற நீதியரசர்களைக்கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் கடந்த இரண்டு நாட்களாக தமது விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதில் நேற்றையதினம் 9பேரும், நேற்று முன்தினம் 14 பேரும் சாட்சியமளித்துள்ளனர்.
இதில் 4அமைச்சர்களுக்கெதிராக சாட்சியமளிக்கப்பட்டபோதிலும் ஒரு அமைச்சருக்கெதிராக பல சாட்சியங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
சாட்சியமளித்த அனைவரிடமும் நீதிமன்ற நடைமுறைபோல் சத்தியம் பெறப்பட்ட பின்னரே சாட்சியம் அளிக்க அனுமதிக்கப்பட்டதெனவும், இதற்கு காவல்துறையினர் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.