ஊழல் அற்ற செயற்பாடுகளை உருவாக்குவதில் வடக்கு மாகாண சபைக்கு பின்னடைவு!

வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட நிர்வாகங்களில் ஊழல் அற்ற செயற்பாடுகளை மேற்கொள்ள முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் வெற்றியடைய முடியவில்லை என வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியின் நேருக்கு நேர் சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாண சபையின் செயற்றிறன் இன்மைக்கு முக்கிய காரணங்களில் ஒன்று, குறித்த நிர்வாகத்திற்கு உட்பட்ட திணைக்களங்களை கட்டுப்படுத்தி ஊழல் அற்ற வினைத்திறன் மிக்க செயற்பாடுகளை மேற்கொள்ள தேவையான காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவித்தார்.

குறித்த நிமைமை உருவாகுவதற்கு வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயற்பாடுகளில் காணப்படுகின்ற குறைபாடுகளே பிரதான காரணம் எனவும் இது, பெரும்பாலான வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு ஏமாற்றத்தையும் வருத்தத்தினையும் ஏற்படுத்துவதாகவும் குற்றஞ் சுமத்தியுள்ளார்.

Related Posts