ஊழலற்ற ஆட்சி! உள்ளிட்ட நலன்சார் திட்டங்களுடன் ஈ.பி.டி.பி-இன் தேர்தல் விஞ்ஞாபனம்

ஊழலற்ற ஆட்சி! நடந்த ஊழல் மோசடிகளுக்கு உடன் விசாரணை என்பதை வலியுறுத்தி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள கட்சி தலைமையகத்தில், கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் நேற்று (புதன்கிழமை) தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது.

சொன்னதைச் செய்தவர்கள்! செய்வதை சொல்பவர் என்ற மகுட வாக்குடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு அரச தொழில்வாய்ப்புகளை உருவாக்கி வழங்குவதாகவும் அதில் வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் விவசாய செய்கையினை ஊக்குவித்தல், வெளிநாட்டு இறக்குமதிகளுக்கு தடை விதித்து, புதிய சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் குறித்தும் விஞ்ஞாபனத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Posts