ஊறணி பகுதியில் மீண்டும் மீன் பிடி நடவடிக்கை

வலிகாமம் வடக்கில் காங்கேசன்துறைக்கும் மயிலிட்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள ஊறணி பகுதியில் உள்ள 325 மீற்றர் நீளமான கடற்கரைப் பகுதியை மட்டுப்படுத்தப்பட்டளவில் மீனவர்கள் பயன்படுத்த இலாணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

ஊரணி மீன்பிடி துறைமுகதை மீண்டும் உள்ளூர் மீனவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு கடந்த 14 ஆம் திகதி யாழ் பாதுகாப்பு படை தலைமையக படையினரின் பங்களிப்புடன் இடம்பெற்றது.

குறித்த இத்துறைமுகம் உள்ளூர் மீனவர்களிடம் மீண்டும் கையளிக்கப்படுவதன் மூலம் ஊரணி, தைட்டி மற்றும் நல்லினக்கபுரம் ஆகிய பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 27 வருடங்களின் பின் தமது வாழ்வாதாரத்தை பெற்றுக்கொள்ள ஏதுவாக அமையவுள்ளதாக பாதுகாப்பு பிரிவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts