ஊர்காவற்துறையில் யுவதியைக் கடத்திய மூவர் கைது!

ஊர்காவற்துறைப் பகுதியில் யுவதியொருவரைக் கடத்திய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஊர்காவற்துறை பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றிற்கு அருகில் வைத்து குறித்த யுவதியை வாகனமொன்றில் கடத்திச் சென்ற இளைஞர்கள், அவரை ஊர்காவற்துறையின் பிறிதொரு பகுதியில் இறக்கி விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குறித்த இளைஞர்கள் மூவரையும் கைது செய்துள்ளதோடு, இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts