நாடுமுழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள வேளையில் மருந்தகங்களைத் திறப்பதற்கு அனுமதியளிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சுத் தெரிவித்துள்ளது.
ஊரடங்கு தளர்த்தப்படும் வேளையில் பொதுமக்கள் மருந்தகங்களிலும் கூடுவதால் ஏற்படும் நெருக்கடியைக் குறைக்கும் வகையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சுத் தெரிவித்துள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நடமாடும் மருந்துப் பொருள்கள் விநியோகத்தை முன்னெடுக்க மாவட்ட மருந்தக உரிமையாளர்கள் சிலர் இணங்கியுள்ளனர் என்று மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.