ஊரடங்கு தளர்த்தப்படும் நேரங்களில் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் -ஆலோசனைகள்

இல்ஙகையில் நாடுமுழுவதும் கடந்த 20ம் திகதி மாலை 6 மணி தொடக்கம்  24 செவ்வாய்க்கிழமை காலை 6  மணிக்கு தளர்த்தப்பட்டு  மதியம் 12 மணிக்கு மீண்டும் அமுல் படுத்தப்பட உள்ளது.

ஊரடங்கு நாளை காலை விலக்கப்பட்டு மதியம் 12 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட உள்ள வேளையில் மக்கள் என்ன செய்யவேண்டும் என சுயதொழில் முனைவாளரும் தகவல்தொழில்நுட்பவியலாளருமான  திரு தவரூபன் தனது  ஆலோசனைகளை முகப்புத்தகம் வாயிலாக வெளியிட்டுள்ளார்.

??????? ??????????????? ???? 6 ??????? ????????????? ?????? 12 ??????? ???????? ??????????????? ???? ???????? ?????? ???? ????????????? ???? ????????? (?????????? ??????? ????? ?????? ???????? ?? ????????? ?????????)

Posted by Thangarajah Thavaruban on Sunday, March 22, 2020

நாளை காலை 6மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் பாய்ந்து விழுந்து திட்டமில்லாத கொள்வனவுகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும் மதியம் 11.30 இற்குள் வீடு திரும்புங்கள்

▪️ஊரடங்கு வேளைகளில் விடுப்பு பார்த்தலுக்காகவும் உறவினர்களை சந்திப்பதற்காகவும் சென்று பொலிசாரிடம் அடி வாங்குவதை தவிர்க்கவும்

▪️ஊரடங்கு வேளைகளில் விவசாயம் மருத்துவ விநியோக மற்றும் ஊடகபணிகள் செய்பவர்கள் அனுமதிக்கப்படுவர்.

▪️உண்மையில் அடுத்த 2-3 நாட்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை மாத்திரம் இல்லை என்றால் வாங்குவதற்கு முயற்சிக்கவும் .அவசியமில்லை இருப்பில் உள்ளதெனில் வாங்க முயற்சிக்க வேண்டாம். மீளவும் ஊரடங் கு தளர்த்தி சந்தர்ப்பங்கள் வழங்குவார்கள்

▪️ அனைத்து மாவட்டங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன இதற்குள் தமிழ்த் தேசியம் இராணுவ மயம் மற்றொரு முள்ளிவாய்க்கால் போன்ற விதண்டா வாதங்களை தவிருங்கள்

▪️வீட்டை விட்டு புறப்படு முன்பாக உங்கள் உடை உடல் என்பவற்றை சுத்தமாகுவதை உறுதிப்படுத்தவும. அதே போல வந்ததும் செய்து கொள்ளுங்கள்.

▪️கொரோனா வைரஸ் அதிகமாக வயதானவர்களையே தாக்கும் என்பதால் உங்கள் பெற்றோர்களை வீட்டு தேவைகளுக்காக வெளியே அனுப்பாதீர்கள்.

▪️பிள்ளைகளின் துணையில்லாத அல்லது இளைஞர்களை கொண்டிராத அயலில் உள்ள முதியவர்களுக்கும் குடும்பங்களுக்கும் உதவுங்கள்.

▪️இளைஞர்களாகிய நீங்களே வீட்டுக்கு தேவையானவற்றை வாங்குங்கள். வெளியில் செல்லும் போது எப்போதும் முன்னெச்சரிக்கையுடனே இருங்கள்.

▪️பெற்றோல் நிரப்பு நிலையம், பல்பொருள் விற்பனை நிலையங்கள், மதுபான விற்பனை நிலையங்கள், வங்கிகள் தானியங்கி பணப்பரிமாற்ற மையங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அவதானமாக இருங்கள். குறைந்தது ஒரு மீற்றர் இடைவெளி பேணவும்.

▪️ கடைக்காரர் உள் நுழையும் வாடிக்கையாளர் அளவை மட்டுப்படுத்துங்கள் பொருட்களை பகிர்ந்து வழங்குங்கள். ஏழை மக்களை கண்ணியமாகவும் பரிவோடும் நடாத்துங்கள். அவர்களின் நிலையறிந்து வழங்குங்கள்.

▪️இயலுமான வரையில் பொதுப்போக்குவரத்தை தவிருங்கள். உங்கள் கைகளால் வாய், மூக்கு, காது என்பவற்றை தொடுவதை தவிருங்கள். உணவு உண்ணமுன்னர் நன்றாக கைகளை கழுவி கொள்ளுங்கள்.

▪️அனைத்து மதத்தவரும் வீட்டிலிருந்தாவாறே பிரார்த்தனைகளில் ஈடுபடுங்கள். விடுமுறையை பயன்படுத்தி உறவினர் வீடுகளுக்கு செல்லல், நண்பர்கள் வீட்டுக்கு செல்லல் என்பதை தவிருங்கள்.

▪️இடர் காலத்தில் மக்களுக்கு உதவி புரிபவர்களும் எச்செரிக்கையுடன் உதவிகளை வழங்க வேண்டும். இவ்வாறனவர்கள் நோய்க்காவிகளாக அமைந்துவிடக்கூடாது. மக்களை ஒன்று கூட வைக்காமல் வீடு வீடாக சென்று வழங்குங்கள்

▪️ தனிமைப்படுத்தல் சுத்திகரிப்பு பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்.

▪️மக்கள் பிரதிநிதிகள் கும்பலாக சென்று பந்தா காட்டுவதை நிறுத்துங்கள். அதிகாரிகளை அவர்கள் பணி செய்ய விடுங்கள்

▪️ மற்றவர்களை பற்றி முறைப்பாடு செய்ய தனிமைப்படுத்த கும்பலாக குவியாதீர்கள்.

▪️ கொரோனா ஒரு அவமானமில்லை. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் சந்தேகத்துக்குரியவர்கள் குற்றவாளிகள் இல்லை. அவர்களது தனிப்பட்ட தகவல்கள் பகிரங்கப் படுத்தப்பட வேண்டியவை இல்லை. சுகாதார துறையினருக்கு மட்டும் வெளிப்படுத்தப்பட வேண்டியவை உங்களை அடைக்க மாட்டார்கள் வீட்டில் தனிமைப்படுத்துவர் கண்காணிப்பார்கள் அவசியப்படின் சிகிச்சை தருவார்கள்.

▪️ சமூக வலைத்தளத்தில் கொரோனா தொடர்பில் மத நிந்தனைகள் இன வேறுபாடுகள் அரசியல் காழ்ப்புணர்ச்சிகள் பிரதேச வாதங்கள் கட்சி முன்னிலைப்படுத்தல்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

▪️ சகல உதவிகளுக்கும் மாகாண சுகாதார பணிப்பாளர் அலுவலகத்துக்கு தொடர்பு கொள்ளுங்கள் 021 2217278

▪️ அயல் வீட்டில் உதவி தேவைப்படின் வேறுபாடுகள் கடந்து உதவுங்கள்

▪️ஒட்டுமொத்தத்தில் மறு அறிவித்தல் வரை வீட்டுக்குள்ளே இருப்பது உங்களுக்கும் பாதுகாப்பு மற்றவர்களுக்கும் பாதுகாப்பு.

▪️ செய்திகள் பகிர முதல் உறுதிப்படுத்துங்கள். பதிவு போட வேண்டும் என்பதற்காக போடாதீர்கள்

▪️ வீட்டில் இருக்கும் நேரத்தை பிரயோசனமாக பயன்படுத்துங்கள். வீட்டில் இருந்து செய்யக் கூடிய அலுவலக வேலைகளை செய்யுங்ள். கற்றல் நடவடிக்கையில் ஈடுபடுங்கள். வீட்டு வேலைகளை செய்யுங்கள். சோம்பேறித்தனத்தை வளர்க்காதீர்கள். குடும்பங்கள் பற்றி புறம் கூறி சண்டை வளர்க்காதீர்கள். பிரச்சனை முடிவுக்கு வந்ததும் எவ்வாறு இயல்பு நிலைக்கு மீளுவது என இப்போதே திட்டமிடுங்கள்.

▪️ முடிந்த வரை அன்பை பரிமாறி நல்ல உணவுகளை பரிமாறி இன்பமாக இருங்கள்.

▪️ இலங்கையை கொரோனாவில் இருந்து மீட்போம்.

Related Posts