ஊரடங்கினால் முடங்கியது யாழ். குடாநாடு!

நாடு முழுவதும் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணியிலிருந்து எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணிவரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து வர்த்தக நிலையங்கள், வணிக ஸ்தாபனங்கள், வங்கிககள் என அனைத்தும் பூட்டப்பட்டு பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருக்கின்றனர்.

இதனால், யாழ்ப்பாண நகரம் உள்ளிட்ட யாழ்ப்பாணத்தின் அனைத்து இடங்களும் அமைதியாக வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

இருப்பினும், ஊரடங்குச் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸார் அறிவித்துள்ள நிலையில் யாழ். நகரம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அத்தியாவசியத் தேவைகளுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Related Posts