Ad Widget

ஊனமுற்றோரின் நலன்களை பேண கிளிநொச்சியில் நிலையம்!

சமூக சேவைகள் அமைச்சினால் ஊனமுற்றோரின் நலன்களை வடமாகாணத்தில் பேணக்கூடிய பிராந்திய நிலையமொன்று மிக விரைவில் கிளிநொச்சியில் அமைக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக ஆராய அமைச்சின் திட்டப்பணிப்பாளர் ஆர்.இராமமூர்த்தி அண்மையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாவட்டங்களுக்கு வருகை தந்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் மேற்படி 03 மாவட்டங்களுக்கும் விஜயம் செய்த போது ஊனமுற்றோரின் தேவைகள் குறித்து கேட்டறிந்து கொண்டார். இந்த 03 மாவட்டங்களினதும் ஊனமுற்றோரின் புனர்வாழ்வு நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் நோக்குடன் உடனடியாகவே தரவு திரட்டல் நடவடிக்கையை பிரதமர் அலுவலகம் மேற்கொண்டது.

அதனடிப்படையிலேயே திட்டப் பணிப்பாளர் ஆர். இராமமூர்த்தியின் வருகை அமைந்தது. இவர் இந்த 03 மாவட்டங்களினதும் அரசாங்க அதிபர்களது தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்கள், சமூக சேவை அலுவலர்கள், சமூக சேவை அபிவிருத்தி அலுவலர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

Related Posts