ஊடகவியலாளர் வீட்டில் ஆவணங்கள் திருட்டு

கிளிநொச்சி, திருமுறிகண்டி பகுதியில் வசித்து வரும் பிராந்திய ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டிலிருந்த முக்கிய ஆவணங்கள் செவ்வாய்க்கிழமை (16) பகல் திருடப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் முறைப்பாடு பதிவு செய்ததாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

ஊடகவியலாளரும், அவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றிருந்த நேரம், வீட்டின் கதவை உடைத்து உள்நுழைந்துள்ள இனந்தெரியாத நபர்கள், அங்கிருந்த ஆவணங்களை திருடிச் சென்றுள்ளதாக மேற்படி முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தும், வீட்டிலிருந்த எந்த பொருளும் திருட்டுப்போகவில்லை எனவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts