செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்கள் வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்திற்கு வரவேண்டாம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதன்கிழமை (28) தெரிவித்துள்ளார்.
செய்திகளினை தாங்கள் அறிக்கைகளாக அனுப்பி வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதுடன் இது தொடர்பில் முதலமைச்சரினால் குறிப்பொன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
செய்தி சேகரிப்பதற்காக வரும் ஊடகவியலாளர்களின் சிரமங்களைத் தவிர்க்கும் பொருட்டும், பத்திரிகையாளர்களுக்கு இருக்கைகள் மற்றும் பிற வசதிகளைச் செய்து கொடுப்பதற்கு முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் இடவசதி போதாமல் இருப்பதாக சுட்டிக்கபட்டப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் வாசஸ்தலத்தில் நடைபெறும் எந்தக் கூட்டத்திற்கு பத்திரிகையாளர் அழைக்கப்படமாட்டார்கள்.
அத்துடன், அது தொடர்பான செய்திகள் 1 மணித்தியாலத்திற்குள் அறிக்கைகளாக அனுப்பி வைக்கப்படுமெனவும் அந்த குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.