ஊடகங்கள் மனைவி பற்றி தவறான செய்திகள் வெளியிடுகின்றன

ஊடகங்கள் சில எனது மனைவிக்கும் குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிக்கும் தொடர்பு என செய்திகள் வெளியிட்டு இருந்தன. இதனால் மனைவி மிகுந்த மன வேதனை அடைந்துள்ளார் என புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ள சந்தேக நபர்களில் ஒருவர் நீதவானிடம் முறையிட்டார்.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணை நேற்றய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதானே போதே குறித்த சந்தேக நபர் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்

நான் இந்த குற்றத்தை செய்யவில்லை நானே இந்த குற்றத்தை செய்தேன் என நீதிமன்றம் கண்டறிந்தால் நான் இந்த இடத்தில் உயிர் துறப்பேன்.

நான் இந்த குற்றத்தை புரியாத போதிலும் சிறையில் உள்ளேன். தற்போது என் மனைவியை பற்றி ஊடகங்களில் பொய்யான செய்திகள் வெளி வருவதனால் ஏற்கனவே அவமானம் அடைந்துள்ள எனது குடும்பம் மேலும் அவமானங்களை எதிர்கொள்கின்றது என நீதவானிடம் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த நீதவான் ஊடகங்கள் சில இந்த வழக்கு தொடர்பில் பிழையான செய்திகளை வெளியிடுகின்றன. பொறுப்பு மிக்க ஊடகங்கள் அவ்வாறு செய்திகள் வெளியிட கூடாது.

வழக்கு விசாரணை தொடர்பில் ஏதேனும் தகவல்கள் விளக்கங்கள் தேவை ஏனெனில் வழக்கு விசாரணை முடிவடைந்த பின்னர் நீதிமன்ற பதிவாளரிடம் கேட்டு அதனை பெற்றுக்கொண்டு சரியான செய்திகளை வெளியிட வேண்டும் என தெரிவித்தார்.

Related Posts