ஊக்கமருந்து பயன்பாடு: கிரிக்கெட் வீரர் குஷால் பெரேரா திரும்ப அழைக்கப்பட்டார்

இலங்கை கிரிக்கெட் அணியின் விக்கட் கீப்பரும், துடுப்பாட்ட வீரருமான குஷல் பெரேரா, தடை செய்யப்பட்டுள்ள ஊக்க மருந்து பாவித்துள்ளது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நியுசிலாந்திற்கான கிரிக்கட் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள இலங்கை அணியில் இடம்பெற்றுள்ள அவர், இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

அண்மையில், பாகிஸ்தானுக்கான கிரிக்கட் சுற்றுப்பயணத்தின் போது, காலக்கிரமமற்ற வகையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையிலேயே இது கண்டுபிடிக்கப்பட்டதாக, இலங்கை கிரிக்கட் சபை வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

ஊக்க மருந்து குறித்த ஒழுங்கு முறைகளுக்கு ஏற்ப, அவரது ‘பி’ மாதிரி பரிசோதிக்கப்படும் என, இலங்கை கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.

குஷல் பெரேரா மீண்டும் இலங்கை அணியில் இணைந்து விளையாடுவதற்கு, சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் நெறிமுறைகளுக்கு உட்பட்ட வகையில், தங்களால் இயன்ற முயற்சிகளை முடிந்த வரை விரைவாக எடுக்க உள்ளதாக, இலங்கை கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்துள்ளது.

தற்போது, நியுசிலாந்தில் குஷல் பெரேராவிற்கு பதிலாக, கௌஷல் சில்வா விளையாட உள்ளார்.

Related Posts