உ/த. பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக் கொள்ளப்படும்

2021 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக் கொள்ளப்படும்.

அதன்படி விண்ணப்பங்கள் இன்று முதல் ஜூலை 30 வரை ஏற்றுக் கொள்ளப்படும் என இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தனியார் மற்றும் பாடசாலை ரீதியான பரீட்சார்த்திகள் விண்ணப்பங்கள் ஆன்லைன் ஊடாக மாத்திரம் ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சை ஆணையாளர் பீ. சனத் புஜித சுட்டிக்காட்டியுள்ளார்.

பரீட்சார்த்திகள், திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தினூடாகவோ அல்லது மொபைல் விண்ணப்பத்தின் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

2021 க.பொ.த உயர் தரப் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 4 முதல் 30 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Related Posts