யாழ்.மாநகர சபைக்கு சொந்தமான உழவு இயந்திரமொன்று விபத்திற்குள்ளானதில் 20 மாநகர சபை சுகாதாரப் பணியாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்றுக் காலை நல்லூரிற்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் உழவு இயந்திரத்தில் பயணம் செய்த 20 பணியாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
வேகக் கட்டுப்பாட்டை இழந்தே உழவு இயந்திரம் தடம் புரண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸார் மேலதி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.