உழவு இயந்திரத்திலிருந்து தவறி வீழ்ந்து முதியவர் மரணம்

accidentயாழ்.காரைநகர் பகுதியில் முதியவர் ஒருவர் உழவு இயந்திரத்திலிருந்து தவறி வீழ்ந்து இன்று உயிரிழந்துள்ளதாக ஊர்காவத்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த முதியவர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருகையிலே இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

காரைநகரைச் சேர்ந்த கணேசு கோபாலகிருஸ்ணன் (வயது 50) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரது சடலம், பிரேதப் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இவரது மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் ஊர்காவத்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Posts