உள்ளூர் தொழில் முயற்சியாளர்ளை பலப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்

உள்ளூர் தொழில் முயற்சியாளர்ளை பலப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

புதிய அரசாங்கத்தினால் உள்ளூர் தொழில் முயற்சியாளர்ளை பலவீனப்படுத்தும் எந்த திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற இளம் தொழில் முயற்சியாளர்கள் சங்கத்தின் 17வது கூட்டத் தொடரில் கலந்து கொண்ட ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

உள்ளூர் தொழில் முயற்சியாளர்கள் சரியான மற்றும் தேவையானதை தெரிவு செய்து செயற்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி தாய்நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்காக தமது அனுபவங்கள் மற்றும் அறிவை தியாகம் செய்ய வேண்டும் என்று உள்ளூர் தொழில் முயற்சியாளர்களிடம் கேட்டுக் கொண்டார்.

புதிய அரசாங்கம் தொடர்பான கருத்துக்கள் குறித்து தான் மிகுந்த அவதானத்துடன் இருப்பதாகவும், சில எதிராளிகள் மற்றும் அரசியல்வாதிகள் ஊடகங்கள் ஊடாக பொய்யான பிரச்சாரங்களை மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார்.

Related Posts