எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் இந்த ஆண்டில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தலை நடத்த வாய்ப்புகள் உள்ளதாகவும், கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாண தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை தேர்தலை பிற்போடுவது மக்களின் வாக்குரிமையை தடுக்கும் செயற்பாடாகும் என தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர் இந்த ஆண்டு இறுதிக்குள் எல்லை மீள் நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையும், தேர்தல் கலந்தாய்வுக் குழுவின் அறிக்கையில் வெளிப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்