எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக மொத்தம் 33 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மார்ச் 3 ஆம் திகதி முதல் இன்று (30) காலை வரை சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக இது தொடர்பில் விடுத்த அறிக்கையில் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதற்கிடையில், சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் 349 கட்சி ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று வரை தேர்தல் தொடர்பான 3 குற்றவியல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
மேலும், மேற்கண்ட காலகட்டத்தில் 89 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
அதேநேரம், தேர்தல் சட்டங்களை மீறியதற்காக பயன்படுத்தப்பட்ட 32 வாகனங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
Related