இந்த ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (18) ஆரம்பமாகவுள்ளது.
இன்று முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான கட்டுப்பணம் செலுத்தும் பணிகள் கடந்த 4ஆம் திகதி ஆரம்பமான நிலையில் எதிர்வரும் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
தேர்தலுக்கான வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
இதற்கிடையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 29 அரசியல் கட்சிகளும் 52 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன.
நேற்று (17) காலை 08.30 மணி முதல் மாலை 04.15 மணி வரை அந்த கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் கட்டுப் பணத்தை வைப்பிலிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக, 50 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை 52 சுயேச்சைக் குழுக்கள் நேற்று செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.