வடமாகாண உள்ளூராட்சி சபைகளில் கடமையாற்றி இளைப்பாறிய பலருக்கு இன்னமும் விதவை, அநாதைகள் ஓய்வூதிய நிதி இலக்கம் கிடைக்கவில்லை எனக் கவலை தெரிவிக்கப்படுகிறது.
1986 ஆம் ஆண்டு மாகாண உள்ளூராட்சி சேவைகள் உள்ளீர்க்கப்பட்ட சிற்றூழியர் தரத்தில் உள்ளவர்கள் ஓய்வு பெற்று 20 வருடங்களுக்கு மேலாகியும் இலக்கம் வழங்கப்படவில்லை.
இந்த ஓய்வூதியர்களுக்கு கொழும்பில் உள்ள ஓய்வூதியர் திணைக்கள விதவை, அநாதைகள் ஓய்வூதியக் கிளையினாலேயே இலக்கங்கள் வழங்கப்படுகின்றன.
உள்ளூராட்சி சபைகளில் பணியாற்றி இளைப்பாறி மரணமடைந்தவர்களுக்கு விதவை அநாதைகள் ஓய்வூதிய இலக்கம் பெற ஆகக்குறைந்தது இரண்டு வருடங்களுக்கு மேல் செல்கின்றது. இதனால் பல குடும்பங்கள் வருமானமின்றி வாழும் நிலை காணப்படுகின்றது.
மாகாண உள்ளூராட்சி அமைச்சு இந்த விடயத்தில் கரிசணையெடுத்து விதவை, அநாதைகள் ஓய்வூதிய இலக்கங்கள் கிடைக்காத உள்ளூராட்சி ஓய்வூதியர்களுக்கு கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஓய்வூதியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.