உள்ளூராட்சி சபைகளை நிறுவும் தினம் ஒத்திவைப்பு!

உள்ளூராட்சி சபைகளை நிறுவும் தினம் எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே எதிர்வரும் 6ஆம் திகதி நிறுவ திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது இதற்கான திகதி பிற்போடப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உள்ளுராட்சி சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25 சதவீதமாக வைத்திருப்பது தேர்தல்கள் ஆணைக்குழுவின் பொறுப்பு என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Posts