உள்ளூராட்சித் தேர்தல் மீண்டும் தாமதமாகும் சாத்தியம்?

உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு திட்டமிட்ட திகதிகளில் இடம்பெறுவது மீண்டும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் இடம்பெறவேண்டும் என்றால் தபால் வாக்குச் சீட்டுகளை மார்ச் 21 ஆம் திகதிக்குள் தமக்கு கிடைக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

எவ்வாறாயினும் இன்றைய தினத்திற்குள் உரிய நிதி ஒதுக்கீடுகள் கிடைத்தால் குறிப்பிட்ட திகதிக்குள் அவற்றை அச்சிட முடியாது என அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

அச்சடிக்கும் பணிகளைத் தொடங்குவதற்குத் தேவையான நிதியை திறைசேரியுடன் கலந்துரையாடி பெற்றுக் கொள்ள வேண்டியது அரச அச்சகத்தின் பொறுப்பு என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நிதி கிடைக்கவில்லை என அரச அச்சகத்தின் பிரதானி ஊடகங்களுக்கு தெரிவித்தாலும், தமக்கு இதுவரை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

வாக்குச் சீட்டுகளை அச்சிடுவது என்பது தமது ஒரு பணி என்றும் திறைசேரியுடன் கலந்துரையாடி தமக்கு தேவையான நிதியை விடுவிப்பது தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பு என்றும் அரச அச்சகத்தின் பிரதானி கங்கானி லியனகே தெரிவித்தார்.

Related Posts