உள்ளுர் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்

ngo_meeting_alunarஉள்ளுர் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி தலைமையில் யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்றய தினம் நடைபெற்றது.

அரச திணைக்களங்களின் கொள்கைகள், நடைமுறைகள் தொடர்பாக ஆளுநரினால் விளக்கமளிக்கப்பட்டது. 2013ம் ஆண்டும் சிறந்த அடைவுகளை பெறும் விதத்தில் அரச திணைக்களங்களுடன் இணைந்து செயற்படுமாறு அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகளை ஆளுநர் கேட்டுக் கொண்டார். அத்துடன் செற்திட்டங்களை ஆரம்பிக்க முன் வட மாகாண சபையின் அனுமதி கட்டாயமாக பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமென்றும், இயன்றவரை ஒரேவிதமான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதனை தவிர்க்குமாறும் ஆளுநர் கேட்டுக் கொண்டார்.

வட மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ், ஆளுநரின் செயலாளர் திரு.இ.இளங்கோவன், வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் துறைசார் உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டார்கள்.

Related Posts