உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வு! : சம்பந்தன்

”உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வைக் காண்பதற்கே முயன்று கொண்டிருக்கின்றோம்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 90ஆவது பிறந்த தின நினைவுப் பேருரையில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்தோடு, நாடு தற்போதைய நெருக்கடி நிலையிலிருந்து விடுபட வேண்டுமாயின் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமென்றும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, நாடு இவ்வாறே பிரச்சினைகளுடன் சென்றால் எவ்வித நன்மையும் கிடைக்கப் போவதில்லை என்பதை உணர்ந்து, சிங்கள மக்களும் தமது மனநிலையை மாற்றிக்கொண்டுள்ளனர் என சம்பந்தன் மேலும் குறிப்பிட்டார்.

Related Posts