சிறார்களுக்கான தடுப்பு மருந்துகளின் விலையை குறைக்குமாறும், அவை தயாரித்து விற்கப்படும் முறையில் மறுசீரமைப்புகளை செய்யுமாறு சர்வதேச மருத்துவ குழுவான எம்.எஸ்.எஃப் என்னும் எல்லைகளற்ற மருத்துவர்களின் அமைப்பு கேட்டுள்ளது.
பல பொதுவான சிறார்களுக்கான தடுப்பு மருந்துகளின் விலை 2001இல் இருந்ததை விட 68 மடங்கு அதிகமாகும் என்று அந்த அமைப்பின் அறிக்கை ஒன்று கூறுகின்றது.
அவற்றின் விலைகளில் வெளிப்படைத்தன்மை கிடையாது என்று விமர்சித்துள்ள அந்த அமைப்பு, உதாரணமாக பல வளரும் நாடுகள் நிமோனியா தடுப்பு மருந்துக்கு பிரான்ஸை விட அதிகமான விலையை கொடுக்க நேர்வதாக குறிப்பிட்டுள்ளது.