உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் பில்கேட்ஸ்: 2 தமிழர்களும் இடம் பிடித்தார்கள்

இந்த வருடத்திற்கான ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் பணக்காரர்கள் வரிசையில் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார் பில் கேட்ஸ். இந்த வருடம், உலகளவில் பெரும் பணக்காரர்கள் 13 சதவீத அளவில் 2,043 ஆக உயர்ந்துள்ள நிலையிலும் பில் கேட்ஸ் தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் இந்த ஆண்டு பணக்காரர்கள் பட்டியல் படி, பில் கேட்ஸின் சொத்துக்கள் 75 பில்லியன் டாலரிலிருந்து 86பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.

ஆனால் இந்த வரிசை அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு மகிழ்ச்சியளிக்கக்கூடியதாக இல்லை; அவர் 220 ஆம் இடத்திலிருந்து 544ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். தற்போது அவரிடம் 3.5பில்லியன் டாலர்கள் அளவே சொத்துக்கள் உள்ளன.

அவரது சொத்துக்களில் ஒரு பில்லியன் அளவு குறைந்ததற்கு காரணம், அமெரிக்க சந்தையில் ஏற்பட்ட தொய்வு நிலையாகும்.

இந்த பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த எச் சி எல் டெக்னாலஜிஸின் நிறுவனர் ஷிவ் நாடார் 102 ஆவது இடத்தை பிடித்துள்ளார். தற்போது எச் சி எல் நிறுவனம் 6.6பில்லியன் டாலர் வருவாய் ஈட்டுகிறது.

மலேசிய வாழ் தமிழரும், பெரும் செல்வந்தருமான ஆனந்த கிருஷ்ணன், ஃபோர்ப்ஸ் செல்வந்தர்கள் பட்டியலில் மீண்டும் இடம் பிடித்திருக்கிறார்.

2,043 பெரும் கோடீஸ்வர்களில் 219 வது இடத்தை பிடித்துள்ளார். இவரின் சொத்தின் மதிப்பு $6.5 பில்லியன்கள்.

“ஆனந்த கிருஷ்ணனின் தகவல் தொலைத்தொடர்பு நிறுவனமான மேக்சிஸ் மற்றும் எண்ணெய் வயல் சேவைகளை வழங்கும் பூமி அர்மாடாவின் பங்குகள் வீழ்ச்சியடைந்ததை அடுத்து, மலேசியாவின் இரண்டாவது செல்வந்தர் என்ற இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு வந்துவிட்டார்.

16.2% மேக்சிஸ் பங்கு விற்பனையில் குழப்பம் இருப்பதாக செளதி தொலைதொடர்பு நிறுவனம் கூறுகிறது. ஆனந்த கிருஷ்ணன், ஹாவர்ட் பிசினஸ் ஸ்கூலில் எம்.பி.ஏ படித்தவர். தாய்லாந்தில் வசித்து வரும் அவரது ஒரே மகன் புத்த மதத் துறவியாக மாறிவிட்டார்.

இதே வேளையில், 27.6பில்லியன் டாலர்களாக இருந்த சொத்துக்கள் 72.8பில்லியன் டாலர்களாக அதிகரித்து அமேசான் நிறுவனர் மூன்றாம் இடத்தில் உள்ளார்.

முகநூல் நிறுவனர் மார்க் சக்கர்ப் ஐந்தாவது இடத்திலும், ஆரக்கல் துணை நிறுவனர் லார்ரி எல்லிசன் ஏழாவது இடத்திலும் உள்ளனர்

இந்த ஆண்டு பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை சர்வதேச அளவில் 2,043 ஆக உயர்ந்துள்ளது.

இந்த பட்டியல் தொடங்கப்பட்டதிலுருந்து, இந்த அளவு எண்ணிக்கை உயந்துள்ளது 31 வருடங்களில் இதுவே முதல்முறையாகும்.

இந்த பட்டியலில் அமெரிக்க பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 565 ஆக உள்ளது இதற்கு காரனம் டிரம்ப் நவம்பர் மாதம் 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக ஃபோப்ஸ் தெரிவித்துள்ளது

319 எண்ணிக்கையில் சீனா இரண்டாம் இடத்தையும், ஜெர்மனி 114 எண்ணிக்கையில் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது

இந்த பட்டியலில் இடம்பெற்ற பெண்களின் எண்ணிக்கை 202லிருந்து 227 ஆக உயர்ந்துள்ளது; மொத்த பெண்களின் சொத்து மதிப்பு 852.8பில்லியன் டாலர்களாக உள்ளது. இரண்டாம் வருடமாக லாரியல் அழகு சாதன நிறுவனத்தின் வாரிசு 39.5பில்லியன டாலர்கள் சொத்து மதிப்புடன் உள்ளனர்

•கடந்த 23 வருடங்களில் 18ஆவது முறையாக பில்கேட்ஸ் இந்த பட்டியலில் முன்னிலை வகிக்கிறார்

•இந்த வருடம், 195 பேர் புதியதாக இடம் பிடித்துள்ளனர் குறிப்பாக சீன பெருநிலப்பரப்பிலிருந்து அதிகம் பேர் இடம் பிடித்துள்ளனர்;

•20 வயதாகும் அலெக்சாண்டரா ஆண்டர்சன் இந்த பட்டியலில் இடம் பிடித்த இளம் வயது நபர் ஆவார்

•சுய முயற்சியில், பணக்காரராக, “ஸ்டிரைப்” என்ற இணைய வழி பணம் செலுத்தும் வலைத்தளத்தை நிறுவிய 26 வயது ஜான் கோலிசன் இடம் பெற்றுள்ளார்.

•இந்த பட்டியலில், சுய முயற்சியில் பணக்காரர்களில் புதிதாக வந்த பெண் தாய்-லி ஆவார். குழந்தையாக இருக்கும் போது அமெரிக்காவில் குடிபெயர்ந்து தற்போது எஸ் எஸ் ஐ என்னும் நிறுவனத்தை அவர் நடத்திக் கொண்டிருக்கிறார்.

Related Posts