உலக நாயகனுக்கு இன்று பிறந்தநாள்

இன்று தனது 62வது பிறந்தநாளை கொண்டாடும் செவாலியே கமல் ஹாஸனுக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகின்றது.

kamal

செவாலியே கமல் ஹாஸன் இன்று தனது 62வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதையொட்டி அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் நேரிலும், சமூக வலைதளங்களிலும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

பலரும் கமலை வாழ்த்துவதால் #Happybirthdaykamalhaasan என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் இரண்டாவது இடத்தில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

என்னுடைய டார்லிங் டாடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!💕💕 என ஸ்ருதி ஹாஸன் வாழ்த்தியுள்ளார்.

விஷால் – நடிப்பு ஜாம்பவான் மற்றும் சிறந்த மனிதரான உலக நாயகன் கமல் ஹாஸனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

குஷ்பு – சிறந்த நடிகர், கொடையாளி, என் சூப்பர் டூப்பர் நண்பர் கமல் ஹாஸனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். சார், நீங்கள் இன்றும், என்றும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துகிறோம்.

Related Posts