ஆபிரிக்க நாடுகள் மட்டுமின்றி உலக நாடுகளையே அச்சுறுத்தி கொண்டிருக்கிறது எபோலா வைரஸ்.
இந்த வைரசின் தாக்குதலால் இந்த ஆண்டில் மட்டும் கினியா, லைபீரியா மற்றும் சியர்ரா ,லியோன் ஆகிய ஆபிரிக்கா நாடுகளில் 1201 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 672 பேர் உயிரிழந்துள்ளனர்.
விலங்கிலிருந்து இந்த வைரஸ் மனிதர்களை தாக்கியுள்ளது. குறிப்பாக பழம் தின்னி வெளவாலிலிருந்து பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வைரஸ் தாக்கியுள்ள மனிதர்களிலிருந்து மற்ற மனிதர்களுக்கு ரத்தத்தின் மூலம் பரவுகிறது.
எபோலா வைரஸ் தாக்கினால் குடும்ப உறுப்பினர்களும் சிகிச்சை அளிப்பவர்களும் கவனமாக இருக்க வேண்டும்.
இல்லையென்றால் அவர்களுக்கும் எளிதில் பரவும் அபாயம் உள்ளது.காங்கோ நாட்டின் எபோலா நதிக்கரையில் முதன்முதலில் பரவியதால் இதற்கு “எபோலா வைரஸ்” என பெயரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.