உலக தரத்தில் வனமகன்!

போகன் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ஜெயம் ரவி.

தற்போது இவர், டிக் டிக் டிக் மற்றும் வனமகன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

வனமகன் படத்தில், சாயீஷா சைகல் என்பவர் நடிக்கிறார். இவர், ஏற்கனவே, தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள், வனப் பகுதியில் தான், படமாக்கப்பட்டுள்ளனவாம். ஜெயம் ரவியோ, ‘என் திரையுலக வாழ்க்கையில், இந்த படம் திருப்புமுனையாக அமையும் உலகத் தரம் வாய்ந்ததாக இருக்கும்’ என்கிறாராம்.

Related Posts