உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு குறுந்திரைப்பட போட்டி

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ரீதியாக குறுந்திரைப்பட போட்டியொன்றை நடத்த சுற்றாடல் இராஜாங்க அமைச்சு தீர்மானித்துள்ளது.

இயற்கை வரைந்த ஓவியம் என்ற தலைப்பில் இக்குறுந்திரைப்பட போட்டி நடத்தப்படவுள்ளது.

அதிகூடியது 5 நிமிடங்களில் சுற்றாடல் தொடர்பில் இக்குறுந்திரைப்படங்களை தயாரித்து அனுப்ப முடியும்.

ஒரு போட்டியாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆக்கங்களை அனுப்ப முடியும். ஒரு டிவிடியில் ஒரு தயாரிப்பு மட்டுமே பதியப்பட்டு அனுப்புதல் வேண்டும்.

அனைத்து தயாரிப்புக்களும் எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் முன்னபிவிருத்தி மற்றும் கல்விப் பிரிவு- சுற்றாடல் இராஜாங்க அமைச்சு- இல. 82. சம்பத்தபாய- ரஜமல்வத்த வீதி- பத்தரமுல்ல என்ற முகவரிக்கு அனுப்ப முடியும். மேலதிக விபரங்களை 0112863652 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்.

Related Posts