உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி

உலக சந்தையில் தற்போது எரிபொருள் விலை வேகமாக குறைந்து வருகிறது.

2018 ஒக்டோபர் 05 முதல் இன்று வரையான கடந்த 21 நாட்களில் ப்ரெண்ட் Brent மசகு எண்ணெய் பெரல் ஒன்று 84.47 டொலரில் இருந்து 76.77 டொலர் வரையிலும், OPEC Basket மசகு எண்ணெய் பெரல் ஒன்று 84.09 டொலரில் இருந்து 75.04 டொலர் வரையிலும் குறைவடைந்துள்ளது.

இது தவிர சுத்திகரிப்பு செய்யப்பட்ட எரிபொருளின் விலையும் இந்த காலப்பகுதியில் குறிப்பிடத்தக்க அளவில் குறவைடைந்துள்ளது.

சிங்கப்பூர் சந்தையில் பெட்ரோல் பெரல் ஒன்று 91.85 டொலரில் இருந்து 79.10 டொலர் வரையில் நூற்றுக்கு 13.88 வீதத்தாலும் டீசல் பெரல் ஒன்று 98.44 டொலரில் இருந்து 90.34 டொலர் வரையில் நூற்றுக்கு 8.23 வீதத்தாலும் மண்ணெண்ணெய் பெரல் ஒன்று 98.35 டொலரில் இருந்து 91.78 டொலர் வரையில் நூற்றுக்கு 6.68 வீதத்தாலும் குறைவடைந்துள்ளது.

Related Posts