Ad Widget

உலகை உலுக்கிய புகைப்படம் : 9 வயதில் அடைந்த தீக்காயத்துக்கு 52 வயதில் சிகிச்சை பெறும் பெண்மணி

வியட்நாம் போரின்போது தென் வியட்நாமில் உள்ள சய்கோன் நகருக்கு அருகிலிருந்த ட்ராங் பேங் கிராமத்தின் குடியிருப்பு பகுதியில் தவறுதலாக வீசப்பட்ட நாபாம் குண்டினால் காயமடைந்த சிறுமி உடைகளை கழற்றியெறிந்து கதறியபடி ஓடி வந்த காட்சி அனைவரது மனதையும் பதைபதைக்கச் செய்தது.

world-war-child-girl-

உலகில் நீண்ட நாட்கள் நடைபெற்ற வியட்நாம் போரில் 1955-ம் ஆண்டு முதல் 1975-ம் ஆண்டு வரை கம்யூனிச ஆதரவு வடக்கு வியட்நாமுக்கும், கம்யூனிச எதிர்ப்பு தெற்கு வியட்நாமுக்கும் இடையே நடந்தது. தெற்கு வியட்நாமிற்கு வட அமெரிக்கா போன்ற கம்யூனிஸ்ட் எதிர்ப்பு நாடுகள் துணை புரிந்தன. இதனால் ஒருவகையில் பொதுவுடமைக்கு எதிரான போராக இது பார்க்கப்பட்டது.

போரின் வீரியத்தை உணர்த்தும் இந்தச் சிறுமி ஓடிவந்த காட்சியை படம்பிடித்த உட் என்பவருக்கு புகைப்படத்துறையின் சிறந்த விருதான புலிட்சர் விருது வழங்கப்பட்டது.

போர் முடிந்து நாற்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் நாபாம் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட கிம் புக்குக்கு (52) இத்தனை காலமாக அந்தத் தழும்புகளைப் போக்கவோ, வலியை குறைக்கவோ தேவையான சிகிச்சை கிடைக்கவில்லை.

இந்நிலையில், கனடா நாட்டில் தனது கணவனோடு தற்போது வசித்து வரும், கிம் புக்குக்கு இலவசமாக லேசர் சிகிச்சையளிக்க அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள மியாமி நகர மருத்துவர் முன்வந்துள்ளார்.

நாபாமின் தாக்கத்தால் கிம் புக்குக்கு பொதுவான அளவுள்ள தோலைக் காட்டிலும் நான்கு மடங்கு பெரிதாகியுள்ளது. இவரைப் பரிசோதித்த மருத்துவர், ‘கிம்முக்கு இருப்பதில் பாதி வலி இருந்திருந்தால் கூட யாரும் பிழைத்திருக்க மாட்டார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள 1972-ம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி தொடங்கிய கிம்மின் ஓட்டம் இன்னும் பத்து மாதங்களில் நிற்கும் என இந்த மருத்துவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

Related Posts